திருமணம் ஆகுமா என்று ஆய்வு செய்யும் முறைகள் !
- jothidam
- May 7, 2017
- 1 min read

ஆண் ஜாதகத்தில் சுக்கரன் குருவை பார்த்தல் நிச்சயம் திருமணம் நடக்கும் .இதன்படி குருவுக்கு 1,5,9 ல் அல்லது 3,7,11 அல்லது 2,12 ல் சுக்கரன் இருந்தால் நிச்சயம் திருமணம் நடக்கும் என்று முடிவு செய்ய வேண்டும் .
ஆண் ஜாதகத்தில் சுக்கரன் சனியை பார்த்தாலும் திருமணம் நடக்கும் .இதன்படி சனிக்கு 1,5,9 ல் அல்லது 3,7,11 அல்லது 2,12 ல் சுக்கரன் இருந்தால் நிச்சயம் திருமணம் நடக்கும் என்று முடிவு செய்ய வேண்டும் .ஆனால் சற்று தாமதமாக நடக்கும் .
ஆண் ஜாதகத்தில் வக்கிர சுக்கரனுக்கு 12 ல் சனியோ ,குருவோ இருந்தால் நிச்சயம் திருமணம் நடக்கும் .
ஆண் ஜாதகத்தில் வக்கரம் பெற்ற குருவுக்கு அல்லது சனிக்கு 12 ல் சுக்கரன் இருந்தால் திருமணம் நடக்கும் .
பெண் ஜாதகத்தில் செவ்வாய் சுக்கரன் பார்த்தால் நிச்சயம் திருமணம் நடக்கும் .இதன்படி சுக்கரனுக்கு 1,5,9, அல்லது 3,7,11 அல்லது 2,12 ல் செவ்வாய் இருந்தால் திருமணம் நடக்கும்.
பெண் ஜாதகத்தில் செவ்வாய் சனியை பார்த்தாலும் திருமணம் நடக்கும் சற்று கால தாமதமாக நடக்கும்.இதன்படி சனிக்கு 1,5,9, அல்லது 3,7,11 அல்லது 2,12 ல் செவ்வாய் இருந்தால் திருமணம் நடக்கும்.
Comentários