திருமண பொருத்தம் பார்க்கும் பொழுது ராகு ,கேது பொருத்தம் எப்படி பார்ப்பது !
- jothidam
- Oct 30, 2017
- 1 min read

அனைவருக்கும் மாலை வணக்கம் !
திருமண பொருத்தம் பார்க்கும் பொழுது நிறைய பேர் 1 ௦ கு எத்தனை பொருத்தம் என்று மட்டும் பார்க்கிறார் கள் அது போக கிரக பொருத்தங்கள் பார்த்து பொருத்தினால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
இதில் திருமண பொருத்ததில் ராகு கேது பொருத்தம் எப்படி பார்ப்பது என்று அறிந்து கொள்வோம்.
ஒருவரின் ராகு நின்ற ராசி எதுவோ அதே ராசியில் மற்றோவரின் ராகு அல்லது கேது இருப்பது சிறப்பாகும் ..தனித்து இருக்க வேண்டும் ,உடன் வேறு கிரகம் இருந்தால் அந்த கிரகம் கடுமையாக பாதிக்கும் .
ஒருவரின் ராகு அல்லது கேது அமர்த்த இடத்தில மற்று ஒருவரின் செவ்வாய் அல்லது சுக்கரன் அமர்ந்தால் திருமண வாழ்வில் கடுமையாக பாதிக்கும் .வழக்கு ,பிரிவினை ,இழப்பு போன்றவை உருவாகும் .
ஒருவருடைய ராகு அல்லது கேது அமர்ந்த ராசியில் மற்று ஒருவருடைய சனி அமர்ந்தால் கடுமையான பாதிப்பு உண்டாகும் .
எனவே அன்பர்களே திருமண பொருத்தம் பார்க்கும் பழுது கவனம் தேவை .
Comments