ராகு கேது உடைய ஆட்சி ,உச்ச ,நீச ,பகை ,நட்பு வீடுகள் பற்றி புலிப்பாணி சித்தர் என்ன சொன்னார்
- jothidam
- Nov 5, 2017
- 1 min read

பாரப்பா ராகுடேனே கேதுவுக்கும்
பாங்கான வீடதுவே கும்பம் ஆட்சி
வீரப்பா விருச்சிகமும் கடகம் உச்சம்
வீருடைய ரிஷபமது நீசம் சிம்மம்
காரப்பா பகையாகும் மற்றேல் நட்பாம்
காண்பதுவும் மூன்று பதினொன்றாம் சொல்லார்
ஆரப்பா போகருடைய கடாட்சத்தாலே
அப்பனே புலிப்பாணி அறிவித்தேனே !
ராகு கேதுவுக்கு வீடுகள் கிடையாது பார்வைகள் கிடையாது என்று ஒரு விதி உண்டு .ஆனால் புலிப்பாணி சித்தர் அவர்கள் கூறிய வாக்கையும் கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது
மேற் சொன்ன பாடலின் விளக்கம்
ராகு கேதுவுக்கு கும்பம் ஆட்சி வீடு .விருச்சிகமும் கடகமும் உச்ச வீடு ,ரிஷபம் நீச வீடு ,சிம்மம் பகை வீடு மற்ற 7 லும் நட்பு வீடு என்றும் புலிப்பாணி சித்தரின் வாக்கு
மேலும் 3, 1 1 பார்வை உண்டு என்றும் சொல்கிறார் .
மேலும் ராகுவுக்கு ரிஷபம் பகை வீடு ,கேதுவுக்கு கும்பம் பகை வீடு என்று சொல்கிறார் !
ஓம் நமசிவாய !
Comentários