ஜாதகப்படி யாரை கண்டு எதிரிகள் நடுங்குவார்கள் என்று புலிப்பாணி சித்தர் சொல்கிறார் !
- jothidam
- Nov 7, 2017
- 1 min read

பாரப்பா பகலவனும் சனி சேய் பாம்பு
பகருகின்ற இக்கோள்கள் ஆறில் நிற்க
கூறப்பா குமரனையும் சத்ரு கண்டால்
குவலயத்தில் புலி கண்ட பசு போல் ஆவர்
சீரப்பா செம்பொன்னும் சென்நாடுண்டு
செயலாக வாழதிருப்பன் விதியும் தீர்க்கம்
ஆரப்பா அத்தலதொன் விழுந்து கெட்டால்
அப்பனே அரசனைப்போல் இருப்பன்பாரே
சூரியன் ,செவ்வாய் ,சனி ,ராகு கேது இவர்களில் ஒருவர் ஆறில் நின்றால் ஜாதகனை கண்ட எதிரிகள் புலியை கண்ட பசு போல் ஆகி விடுவார்கள் .
செம்பொன்னும் ,திரவியங்களும் ,விலை நிலங்களும் உண்டாகும் .திடமான வாழ்க்கை வாழ்வார் .ஆயுளும் தீர்க்கமாகும் .
ஆறாம் ராசிக்கு உடையவன் கெட்டு மறைந்து பலவினமாக இருந்தால் ஜாதகன் அரசனுக்கு சமம் ஆகா வாழ்வான் .
Comments