அயன ,சயன ,போக ஸ்தான யோகங்கள் !
- jothidam
- May 23, 2017
- 1 min read

அன்புள்ள நண்பர்களே !
ஜாதகத்தில் பன்னிரண்டாம் இடம் அயன ,சயன ,போக ஸ்தானம் .
இந்த பன்னிரெண்டாம் இடம் விரைய ஸ்தானம் என்று ஒரு பெயரும் உண்டு.இது மிக முக்கிய ஸ்தானம் .இந்த பன்னிரெண்டாம் இடம் தரும் யோகங்கள் பார்ப்போம் .
அநபா யோகம்
ஜாதகத்தில் ராசிக்கு அதாவது சந்திரனுக்கு பன்னிரண்டில் சூரியன் தவிர மற்ற கிரகங்கள் அமர்வது அநபா யோகம் .பெயர் ,புகழ் ,பொன் ,அந்தஸ்து , இன்ப வாழ்வு உண்டு .
விபரீத ராஜ யோகம்
ஆறு ,எட்டின் அதிபதி பன்னிரண்டின் அதிபருடன் சேர்வது எதிர் பாராத அதிர்ஷ்டம் தரும் விபரீத ராஜ யோகம்
விமலா யோகம்
பன்னிரண்டின் அதிபர் அதிலேயே இருபது சுகவாசி யோகம்,சுதந்திரமாக வாழ்வார் ,தொண்டு செய்யும் மனப்பான்மை உண்டு .
மகா சக்தி யோகம்
ராசிக்கு அதாவது சந்திரனுக்கு பன்னிரண்டில் ராகு இருப்பது ஆற்றல் மற்றும் எல்லா சுகமும் தரும் .
சிவ யோகம்
சூரியனுக்கு பன்னிரண்டில் சுக்கரன் இருப்பது பூமியை ஆட்சி செய்யும் யோகம் ,அரசரால் பூஜிக்க படும் யோகம் ,நல்லோர் புகழும் யோகம் .
மோக்ஷ யோகம்
பன்னிரண்டில் கேது இருந்தால் மறு பிறவி இல்லாத மோட்ஷ யோகம் .
உபய கேசரி
சூரியனுக்கு இரண்டு பன்னிரண்டில் சந்திரன் தவிர மற்ற கிரகங்கள் இருப்பது உபய கேசரி ,நல்ல தைரியம் ,உழைப்பால் உயர்வு உண்டு.
コメント