ஜோதிடத்தில் புத்தி என்றால் என்ன ?
- jothidam
- May 19, 2017
- 1 min read

வணக்கம் நண்பர்களே !
பொதுவாக புத்தி என்பது தெரியும் .ஜோதிடத்தில் புத்தி என்றால் என்ன ?
ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலத்தை தங்கள் ஆளுமையில் வைக்கிறது ஒரு ஜாதகருக்கு என்று தெரிந்து கொள்ளுங்கள் .
அதுவே ஜோதிடத்தில் திசா என்கிறோம் .அந்த திசா ஆதிக்க கிரகம் ஜாதகருக்கு நல்ல கிரகம் ஆனால் நன்மை செய்யும் தீய கிரகம் ஆனால் தீமை செய்யும் .எடுத்துக்காட்டாக ஒரு ஜாதகருக்கு சனி அசுப கிரகம் ஆனால் சனி திசை நடக்கும் 19 ஆண்டுகளும் தீமை செய்தால் அந்த ஜாதகர் தாங்க மாட்டார் .எனவே ஒவ்வொரு திசாவிலும் ஒன்பது கிரகங்களும் தங்கள் ஆளுமையை எடுத்து கொள்ளும் காலமே புத்தி எனப்படும் .
அசுப திசை ஆனாலும் சுப புத்தி வந்தால் ஜாதகருக்கு சுப பலனை செய்யும் என்பதால் ஜாதகர் சுப திசையில் சிறிது மூச்சு விட ஆண்டவன் செய்த விளையாட்டு தான் இந்த ஜோதிட புத்தி என்பது என்று சொல்லி அனைவருக்கும் மாலை வணக்கம் .
Comments