ஜோதிடத்தில் துருவ கணித ரகசியம்
- jothidam
- May 23, 2017
- 1 min read

ஜோதிடத்தில் துருவ கணிதம் என்று ஒன்று உண்டு இது பாரம்பரிய ஜோதிடர்கள் மற்றுமே உபயோகிக்கும் பரி பாஷை .இந்த துருவ கணிதம் தெரிந்த ஜோதிடர்களே ஜோதிடர்கள் மத்தியிலும் விவரம் தெரிந்த மக்கள் மத்தியிலும் அங்கீகரிக்க படுவார்கள் .
ஏட்டில் மற்றும் காலேஜ் மூலம் அல்லது வகுப்பு மூலம் ஜோதிடம் படிப்பவர்கள் எதை அறிய மாட்டார்கள் .இந்த ரகசிய ஜோதிட பரிபாஷை அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் எங்கே பதிவிட்டுளோம் .இது ஜோதிட மாணவர்கள் மற்றும் ஜோதிட ஆர்வலர்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும் .
1 அல்லது ல ---- ஜாதகர்
3 ------------------- இளைய சகோதரர்
1 1 ------------------ மூத்த சகோதரர்
9 அல்லது சூ ---- தந்தை
9 9 --------------------- தாத்தா (தந்தையின் தந்தை )
9 4 ----------------------பாட்டி ( தந்தையின் தாயார் )
4 அல்லது சந் --------- தாயார்
4 4 ---------------------------தாயாரின் தாயார் (பாட்டி )
4 9 --------------------------தாயாரின் தந்தை (தாத்தா )
சு அல்லது 7------------- மனைவி அல்லது கணவன்
செ ------------------------ சகோதரம்
பு ------------------------- தாய் மாமன்
வி --------------------- குழந்தை
முதலில் வரும் எண் ஜாதகரை குறிக்கும் இரண்டவது வரும் எண் ஜாதகரின் உறவை குறிக்கும் ,முன்றாவது வரும் எண் உறவில் ஆணையும் நான்காவது வரும் எண் உறவில் பெண்ணை குறிக்கும் .
1-3-1-1 ஜாதகருடன் பிறந்தவர் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் .
1-3-1-1 ஜாதகருடன் பிறந்தவர் ஒரு தம்பி மற்றும் ஒரு தங்கை
1-3-௦-௦ ஜாதகருக்கு இளைய உடன் பிறப்பு இல்லை .
1-9 -4-5 ஜாதகருடைய தந்தையுடன் பிறந்தவர்கள் நான்கு ஆண் ஐந்து பெண் .
1-4-2-3 ஜாதகர் தாயாருடன் பிறந்தவர்கள் இரண்டு ஆண் ,மூன்று பெண்கள் .
9-0 அல்லது சூ -௦ தந்தை இல்லை
4-0 அல்லது ச --௦ தாயார் இல்லை
பு -நீ ----------- தாய் மாமன் இல்லை
பு - ௦ ------------ தாய் மாமன் இல்லை
பு --பிலம் (பி ) --தாய் மாமன் உண்டு
1-5-2-1 ----------- ஜாதகருக்கு இரண்டு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உண்டு .
இது போல் பல உண்டு நண்பர்கள் இப்பொழுது புரிந்து இருப்பார்கள் என்று நினைக்கிறன் நன்றி .
இவை சில உதாரணம் மட்டுமே .
Comments