top of page

புதன் பகவான் தரும் அற்புத யோகங்கள் !

  • jothidam
  • May 15, 2017
  • 1 min read

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று ஒரு பழ மொழி உண்டு.

அப்படிப்பட்ட புதன் பகவான் ஜாதகத்தில் என்ன என்ன யோகங்கள் தருவார் என்று பார்ப்போம் .

வித்தைக்கு அதிபதியான புதன் பகவான் தாய் மாமன் மற்றும் உறவினர்களுக்கு காரகன் .விஞ்ஞானி ,மருத்துவ வல்லுநர் ,மந்திரவாதி ,ஜோதிடர் ஆவதற்கு புதன் பகவானே காரணம் !

புதன் பகவான் வாக்கு வன்மை அதாவது பேச்சு திறமை கொடுப்பார் .

மனிதனின் தோல் நோய்கள் வர அதிகாரம் படைத்தவர் புதன் பகவான் .

புதன் பகவான் நிறம் பச்சை .கோமாளி ,சாஸ்திரி ,,புலவர் போன்ற வைக்கும் புதனே காரணம் .

விஞ்ஞான காரகன் புதன் பகவான் புது விஞ்ஞானிகளை அவரே உருவாக்குவார். புதன் பகவானே புது கண்டுபிடிப்புகள் உருவாக்க காரணமானவர் .

புதன் பகவான் லக்னத்திற்கு கேந்திரத்தில் ஆட்சி அல்லது உச்சம் பெற்றால் பத்ர யோகத்தை தருவார்

புதன் பகவான் பகை வீடான மேஷத்தில் இருந்தால் வியாபாரம் உத்தி நிறைந்தவராக இருப்பார் .ரண சிகிச்சை (surgen )ஆவார் .

புதன் பகவான் நட்பு வீடான ரிஷபத்தில் இருந்தால் நாடக துறையில் சிறந்து விளங்குவார் தார் பொழுது சினிமா துறை என்று சொல்லலாம் .

புதன் பகவான் தனது ஆட்சி வீடான மிதுனத்தில் இருந்தால் நல்ல பேச்சாளராக இருப்பார் .

புதன் பகவான் பகை வீடான கடகத்தில் இருந்தால் மன அமைதியை தொலைபார் .

புதன் பகவான் நட்பு வீடான சிம்மத்தில் இருந்தால் தாயாருக்கு தோஷம் அலைச்சல் தொழில் தருவார் .

புதன் பகவன் தனது உச்ச வீடான கன்னியில் இருந்தால் சிறப்பான முனேற்றம் வியாபாரம் தருவார் .

புதன் பகவான் நட்பு வீடான துலாத்தில் இருந்தால் நல்ல பலனையும் சுபருடன் இருந்தால் ராஜ யோகா அமைப்பையும் தருவார் .

புதன் பகவான் பகை வீடான விருசிகத்தில் இருந்தால் மந்திர வாத தொழில்,ஜோதிடம் போன்ற தொழில் தீய வழியில் சம்பாதிப்பர் .

புதன் பகவான் சம வீடான தனுசில் இருந்தால் அவசர பட்டு காரியம் செய்பவராக இருப்பார் ,சந்தேகம் உள்ளவராக இருப்பார்.

புதன் பகவான் மகரம் நட்பு வீட்டில் இருந்தால் தொழிலாளர்களுக்கு போர் ஆடுபவராக இருப்பார் .

புதன் பகவான் நட்பு வீடான கும்பத்தில் இருந்தால் வியாபாரத்தில் புது உத்தியை தருவார் .

புதன் பகவான் நீச வீடான மீனத்தில் இருந்தால் தெய்வ பக்தி உடையவராக இருப்பார் ,வெகுளி தனத்தால் ஏமாறுவார் .

 
 
 

Comments


Check back soon
Once posts are published, you’ll see them here.
Recent Posts
Archive
Search By Tags
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
  • Facebook - White Circle
  • Pinterest - White Circle
  • Instagram - White Circle

© 2023 by Jade&Andy. Proudly created with Wix.com

bottom of page