முக்குண வேளை என்றால் என்ன ?
- jothidam
- May 15, 2017
- 1 min read

பொதுவாக மூன்று குணங்கள் உண்டு என்பதை அறிவிர்கள் .அவை சாத்விகம் ,ராஜசம் ,தாமசம் ஆகும்.
ஒவ்வொரு நாளும் மூன்று குணங்களும் வரும் .
ஒரு வேளை மூன்றே முக்கால் நாழிகை (ஒன்றரை மணி நேரம் ) அதாவது ஒரு முஹுர்த்தம் ஒவ்வொரு நாளும் முன்று வேளையும் மாறி மாறி வரும் .
திங்கள் மற்றும் வியாழன் கிழமைகள் சாத்விக நாள்கள் ஆகும் .
அந்த திங்கள் மற்றும் வியாழன் அன்று முதலில் அதாவது காலை 6 மணி முதல் ஏழரை மணி வரை சாதிவிகள் வேளை பிறகு ராஜச வேளை அதன் பிறகு தாமச வேளை வரும் .
செவ்வாய் ,வெள்ளி ஆகிய நாட்களில் முதலில் ராஜச வேளை வரும்.
ஞாயிறு ,புதன் சனி ஆகிய முன்று நாட்களும் தாமச வேளை முதலாவதாக வரும்.
சாத்விக வேளையில் பிறந்தவன் நல்ல அறிவும் ,சந்தோசம் உள்ளவனாகவும் ,ஞான மார்கத்தில் ஈடுபாடு உள்ளவனாக இருப்பான் .
ராஜச வேளையில் பிறந்தவன் அரசாட்சி புரிபவன் ,ஆசை உள்ளவன் ,சகல சௌகரியங்கள் விரும்புவனாக இருப்பான் .
தாமச வேளையில் பிறந்தவன் பொய் பேசுபவன் ,பாவம் செய்பவன் மற்றும் சோம்பேறியாக இருப்பான் .
என்ன நண்பர்களே தாங்கள் பிறந்த வேளை கொண்டு தங்களுடைய குணங்களை ஆய்வு செய்யுங்கள் என்று சொல்லி மதிய வணக்கம்.
Commentaires