முதலில் இறப்பது மனைவியா அல்லது கணவனா ?
- jothidam
- May 28, 2017
- 1 min read

ஒருவனுக்கு சனி,செவ்வாய்,ராகு அல்லது சூரியன் லக்னத்திற்கு ஏழாம் இடத்தில இருந்தால் மனைவிமார் எத்தனை பேர் இருந்தாலும் வரிசையாக இறப்பர் .
இக்கிரங்கள் எட்டில் இருக்க கணவனே முந்தி சாவன் என்பது புலிபாணி வாக்கு .
பாராப்பா இன்னும் ஒரு புதுமை கேளு
படஅரவு சனி செவ்வாய் வெய்யோன் ஏழில்
வாரப்பா வந்தமொரு தாரமெல்லாம்
வையகத்தில் மாண்டிடுவார் வரிசையாக
ஆரப்பா அட்டமத்தில் இவர்கள் குக்க
அப்பெண்ணின் கணவனோ முந்திசாவான்
சீரப்பா போகருட கடாட்சத்தாலே
சிறப்பாக புலிபாணி நூலைபாரே
சுக்கரன் எட்டில் இருந்தால் சுக போகம் கட்டில் மெத்தை எல்லாம் கிடைக்கும் .சேலம் நிலம் எல்லாம் கிடைக்கும் .அரண்மனை உத்தியோகம் கிடைக்கும் .பிற்காலத்தில் இவற்றை கொடுத்தவனே எடுத்துகொல்வான் வறுமையில் சாவன் என்பது புலி பாணி வாக்கு .
சொல்லப்பா சுடர்வெள்ளி எட்டில் நிற்க
சுகமான கட்டில் மெத்தை மாட கூடம்
அல்லப்பா அகம் பொருளும் நிலமும் கிட்டும் '
அரண்மனையில் சேவகவும் செய்வான் காளை
தள்ளப்பா தரை பொருளும் நிலமும் எல்லாம்
தந்தவனே வாங்கிடுவன் பின்னால் கேடு
வல்லப்பா போகருட கடாட்சத்தாலே
வளமான புலிபாணி பாடினேனே
Comentarios