ராசி பிண்டம் கிரக பிண்டம் மூலம் ஒரு மனிதனின் ஆயுளை எப்படி அறிவது !
- jothidam
- May 16, 2017
- 1 min read

அஷ்ட வர்க்கம் மூலம் ஆயுள் கணிதம் செய்யும் பொழுது முதலில் திரி கோண சோதனை மற்றும் ஏகாதிபத்திய சோதனை முடிக்க வேண்டும் .எதனை கொண்டு ராசி பிண்டம் ,கிரக பிண்டம் அறிந்து பிறகு சேர்த்திய பிண்டம் அறிந்து ஒரு மனிதனின் ஆயுள் கணிதம் செய்ய வேண்டும் .
ராசி பிண்டத்தில் மேஷம் முதல் மீனம் வரை ஒவொரு ராசிக்கும் ஒரு எண் கொடுக்க பட்டுள்ளது .ஏகாதிபத்திய சோதனை பரல்களை அனந்த அந்த ராசிக்குரிய எண் களுடன் பெருக்கி வரும் தொகையே ராசி பிண்டமாகும் .
ராசிகள் -- ----------- பெருக்க வேண்டிய எண்
ரிஷபம்/சிம்மம் - 10
மிதுனம் /விருசிகம் -8
மேஷம் /துலாம் -7
கன்னி /மகரம் -5
கடகம் -4
தனுசு -9
கும்பம் -11
மீனம் -12
இப்படி ஒவோவ்று கிரகமும் 12 ராசிகளில் உள்ள ராசி பிண்டம் அறிய வேண்டும் .பிறகு கிரக பிண்டம் அறிய வேண்டும் .
குரு இருந்த வீட்டின் பரல்களை 10 ஆலும்
செவ்வாய் இருந்த வீட்டின் பரல்களை 8 ஆலும்
சுக்கரன் இருந்த வீட்டின் பரல்களை 7 ஆலும்
மற்ற கிரகங்கள் 5 ஆலும் பெருக்கி கிரக பிண்டம் அறிய வேண்டும் .
இவ்வாறு ராசி மற்றும் கிரக பிண்டம் கூட்டி வந்த சேர்த்திய பிண்டத்தை முப்பதால் வகுத்து வரும் ஈவு அந்த கிரகம் தரும் ஆயுள் வருடம் மீதியை 12 பெருக்கி 30 ஆல் வரும் தொகை மாத மாகவும் கொள்ள வேண்டும் .இவ்வாறு ஒவொரு கிரகம் தரும் ஆயுளையும் கூட்டி மொத்த ஆயுளை கணிதம் செய்ய வேண்டும் .
இந்த அறிய ஜோதிட ரகசியத்தை நமது மக்கள் பயன் பெற வேண்டும் என்றே இங்கே கொடுக்க பட்டுள்ளது .அனைவருக்கும் காலை வணக்கம் .
ஸ்ரீ ராமஜெயம் .
Comentarios