விஷ கண்டம் ,சர்ப்ப கண்டம் ,நாய் கடி கண்டம் உள்ளதா உங்கள் ஜாதகத்தில் !
- jothidam
- Jul 14, 2017
- 1 min read

சர்ப்ப கண்ட அமைப்பு
ராகு மாந்திவுடன் இணையந்து இரண்டில் இருந்தால் ஜாதகர் பாம்பால் கடிக்க பெறுவார் .நகரத்தில் உள்ளவர்கள் பாம்பு கடிக்கு இணையான ஒவ்வாமை ஏற்படும் .
விஷ கண்டம்
இரண்டுக்கு உரியவர் தீய கோள்களின் நவாம்சத்தில் இருந்தாலோ பார்த்தாலோ அல்லது இரண்டில் தீய கோள்கள் இருந்தாலோ பார்த்தாலோ ஜாதகர் விஷம் போன்ற நச்சு பொருளினால் இறக்கலாம் .
நாய் கடி யோகம் !
இரண்டில் சனி பாவிகளுடன் இருந்தாலும் பார்த்தாலும் நாய்களை கண்டு அஞ்சி நடுங்குவான் .
இரண்டில் நீச கோள்கள் இருக்க இரண்டாம் அதிபதி பாவிகளுடன் சேர்ந்து அல்லது பார்க்கப்பட்டு இரண்டாம் வீட்டில் நிற்க ஜாதகன் நாய் கடி உண்டு.
Comments