ஷட் பலம் அறிந்து ஜோதிடம் சொல்வோம்
- jothidam
- May 29, 2017
- 1 min read

அன்புள்ள நண்பர்களே ,
ஜோதிடத்தில் பலன் சொல்லும் பொழுது ஷட் பலம் அறிந்து சொல்ல வேண்டும் .ஷட் பலம் என்றால் ஆறு பலம் ஷட் என்றால் ஆறு அவை ஸ்தான பலம் ,திருஷ்டி பலம் ,திக் பலம் ,சேஷ்டா பலம் ,கால பலம் ,நைசர்கிய பலம் ஆகும் .
ஸ்தான பலம்
ஸ்தானம் என்றால் இருப்பிடம் என்று பொருள் .ஒரு கிரகம் ஆட்சி ,உச்சம் ,மூலதிரிகோணம் ,நட்பு ,வர்கோதமம் நீச வீட்டிலில் இருந்து உச்ச வீடு செலும் வழியில் இருந்தால் ,கேந்திர திரி கோணத்தில் இருந்தால் ஸ்தான பலம் பெரும் .
திருஷ்டி பலம்
கிரங்கல் பாப கிரங்கல் பார்வை இன்றி சுப கிரகங்கள் பார்வை பெற்றால் திருஷ்டி பலம் பெரும் .எங்கே சுப கிரங்கல் என்பது லக்ன சுபரை குறிக்கும் .
திக் பலம்
திக் என்றால் திசை என்று பொருள் .லக்னம் முதல்லாக பன்னிரண்டு ராசியில் கிரகங்கள் அமரும் நிலை கொண்டு திக் பலம் பெரும் .
புதன் ,குரு -- கிழக்கே அதாவது லக்னத்தில் திக் பலம் பெரும்
சந்திரன் -சுக்கரன் --வடக்கே அதாவது லக்னத்தில் இருந்து நான்காம் வீட்டில் அமரும் பொழுது திக் பலம் .
சனி --மேற்கில் அதாவது ஏழாம் வீட்டில் திக் பலம்
சூரியன் ,செவ்வாய் --தெற்கில் அதாவது பத்தாம் வீட்டில் திக் பலம் .
சேஷ்டா பலம்
இது கிரங்களின் பயண அடிப்படை பலம் .சூரியன் ,சந்திரன் உத்திராயண காலத்திலும் ,மற்ற கிரங்கல் வக்கிரம் பெரும் காலங்களிலும் ,கிரக யுத்தத்தில் வெற்றி பெரும் பொழுதும் ,சந்திரனுடன் கூடும் பொழுதும் ,சுப கிரங்கல் உடன் கூடும் பொழுதும் சேஷ்டா பலம் பெரும் .
கால பலம்
பகல் இரவு என்ற இரண்டு காலங்களின் வலிமை கால பலம் ஆகும் .
சூரியன் ,குரு ,சுக்கரன் பகலில் கால பலம் பெரும் .
சனி ,செவ்வாய் ,சந்திரன் ஏறவில் கால பலம் பெரும் .
புதன் பகல் இரவு இரண்டு வேளையும் கால பலம் பெரும் .
நைசர்கிய பலம்
கிரகங்களின் வலிமை குறிக்கும் இதில் சனி -செவ்வாய் -புதன் -குரு -சுக்கரன் -சந்திரன் -சூரியன் -ராகு -கேது என்ற வரிசையில் சனி பலம் குறைந்தவர் கேது வலிமை உள்ளவர் . ஒரு ராசியில் இவர்கள் கூடினால் இந்த அடிபடையில் நைசர்கிய பலம் பெரும்
simple and good explain😀