கிரக மாலிகா யோகம்
- jothidam
- Jun 2, 2017
- 1 min read

லக்னத்தில் இருந்து கிரங்கள் மாலை போல் வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக அமைந்திருப்பதே கிரக மாலிகா யோகமாகும் .
அப்படிப்பட்ட கிரக அமைப்பு தசா புத்திகளுக்கு ஏற்ப வரிசையாக இருக்குமானால் மிகுந்த பலன் தரும் .
ஆனால் ராகு கேதுக்குள் இந்த கிரங்கள் அடங்கி விட்டால் அது கால சர்ப்ப தோஷமாகும் .
லக்னத்தில் இருந்து வரிசையாக ஒன்பது கிரகமும் இருந்தால் அந்த மனிதர் மிக அபூர்வ பிறவியாக இருப்பார் .அவர் பெரிய மகான் ஆவார் .
லக்னத்தில் இருந்து எட்டு கிரகம் வரிசையாக இருந்தால் அந்த மனிதர் கொடிய குணம் உள்ளவராக இருப்பார் .
லக்னத்தில் இருந்து ஏழு கிரகங்கள் வரிசையாக இருந்தால் அவர் ஒரு நாட்டின் அதிபராக அல்லது சர்வாதிகாரியாக இருப்பார் .சிறந்த அறிவாளி மற்றும் உலகம் போற்றும் உத்தமராக இருப்பார் .
லக்னத்தில் இருந்து ஆறு கிரகங்கள் தொடர்ச்சி யாக இருந்தால் அவர் விஞ்ஞானி யாக இருப்பார் ,மத போதகராக இருப்பார் .
லக்னத்தில் இருந்து ஐய்ந்து கிரங்கல் வரிசையாக இருந்தால் அவர் மிக பெரிய செல்வந்தராக இருப்பார் ,ஆடம்பர பிரியர் ஆகா இருப்பார் .
லக்னத்தில் இருந்து நான்கு கிரங்கள் தொடர்ச்சியாக இருந்தால் அவர் பிறன் மனை நாடுபவராக இருப்பார் .சுயநலம் உள்ளவராக இருப்பார் .
லக்னத்தில் இருந்து மூன்று கிரங்கள் வரிசையாக இருந்தால் பிறருக்கு உதவி செய்பவர் எதற்கும் அடங்கி நடக்காதவர் .
லக்னத்தில் இருந்து இரண்டு கிரங்கள் வரிசையாக இருந்தால் நீண்ட ஆயுள் தன குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்பவராக இருப்பார் .
லக்னத்தில் மட்டும் ஒன்றோ அல்லது அதற்கு மேல் கிரங்கல் இருந்தால் ஆத்ம பலம் உள்ளவர் ,ஜாதகர் தோற்றத்திற்கு மதிப்பு இருந்தாலும் மிக பெரிய சிறப்பு இல்லை .
コメント